Home உலக செய்திகள் பட்டினியோடு பத்தாம் நாளாக தொடரும் போராட்டம் – மகளிர் தினத்திலும் பிரித்தானியாவின் பாரா முகம்!

பட்டினியோடு பத்தாம் நாளாக தொடரும் போராட்டம் – மகளிர் தினத்திலும் பிரித்தானியாவின் பாரா முகம்!

182
0

சர்வதேச மகளிர் தினமான இன்றும் பிரித்தானிய தலைநகரில் பட்டினியோடு பத்தாவது நாளாகவும் தொடர்கிறது அம்பிகையின் நீதிக்கான போராட்டம்.

உலகில் ஜனநாயகத்திற்கும், சம உரிமைக்கும் முழுமையான இடத்தை வழங்குபவர்கள் தாங்களே என்றும், மனித உரிமையை நிலை நாட்ட முன்னின்று உழைப்பவர்கள் எனவும் மார்தட்டிக் கொள்ளும் பிரிட்டன் அரசினால் 10 நாட்கள் கடந்தும் இன்றுவரை எந்த பதிலும் கிடைக்காமல் பட்டினியோடு போராட்டத்தை தொடரும் அம்பிகையின் போராட்டம் பல வினாக்களை எழுப்பி நிற்கின்றது.

இந்த நிலையில், பெண்கள் அமைப்பு பிரதி நிதிகள், பெண்களை பிரதி நிதித்துவம் செய்யும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவெரும் உலகெங்கும் பரந்து உரத்து குரல்கொடுக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் அவர்கள் முன் எழுந்துள்ளது.

பிரித்தானியாவிலே பாராளுமன்ற உறுப்பினர்களோடு நெருக்கத்தை பேணியவர்கள் விரைந்து செயற்பட்டு தமக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல் வாதிகளை கொண்டு இப் போராட்டத்திற்கான ஆதரவுகளையும், உரைகளையும் பெற்று அதனை வெளியிடுவதோடு, பாராளுமன்றத்திலும் அவர்களின் குரலை ஒலிக்க வைக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளதை அரசியல் மற்றும் சமூக பணியாளர்கள் உணர்ந்து செயற்படவேண்டிய நேரமிது.