பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி வேண்டி மகளிர் தினமான இன்று (8) யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரை யோடு ஆரம்பித்த இந்த தீப்பந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த போதும் மிகவும் சிறிய எண்ணிக்கையிலானோரே போராட்டத்தில் பங்குபற்றியதை காண முடிந்தது.
