Home செய்திகள் வீடுகளுக்கு சென்று விபரம் திரட்டும் இராணுவம் – வீதிகளிலும் திடீர் சோதனை:

வீடுகளுக்கு சென்று விபரம் திரட்டும் இராணுவம் – வீதிகளிலும் திடீர் சோதனை:

44
0

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென மேற்கொள்ளப்படும் இராணுவச் சோதனைகளால் மக்கள் அச்சமைந்துள்ளனர்.

வவுனியா – புதிய சேலர் சின்னக்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் அடையாள அட்டைகளை பதிவு செததோடு, வீட்டில் இருப்போர் எண்ணிக்கை, வயது, மற்றும் தொழில் என்பவற்றை கேட்டு பதிவு செய்து சென்றுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் திடீர் வீதி சோதனைகளும் இராணுவத்தினரஅல் நடாத்தப்படுவதாகவும், இதனால் அசெளகரியங்களுக்கு உள்ளாவதோடு, அச்சமும் அடைந்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.