Home செய்திகள் ஐ.நா பிரேரணையை ஏற்றது கூட்டமைப்பு:

ஐ.நா பிரேரணையை ஏற்றது கூட்டமைப்பு:

34
0

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், அது வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரின் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரித்து , தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் விதமாகவும், இலங்கை அரசை காப்பாற்றும் முகமாகவும் வெளியான ஐ.நா பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்று கொண்டுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.