Home செய்திகள் D2P எனும் புதிய பேரணி யாழில் நுழைந்ததால் பதற்றம்:

D2P எனும் புதிய பேரணி யாழில் நுழைந்ததால் பதற்றம்:

24
0

இன்று (06/03) காலை திடீரென சிறீலங்கா தேசியக் கொடிகளோடு யாழ் நகருக்குள் புகுந்த பேரணி ஒன்றால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

D2P என அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பேரணியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் யாழில் இராணுவத்தின் துணையோடு இயங்கிவரும் ரெளடிகள், மற்றும் சிங்களவர்கள் ஆவர்.

அத்தோடு குறித்த பேரணியை தமிழர்கள் நடாத்தியதாக காட்டுவதற்காக பின்தங்கிய கிராமங்களில் இருந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சில தமிழ் மக்களையும் நிவாரன உதவிகளும், பணமும் தருவதாக கூறி பேரூந்துகளில் ஏற்றிவந்து பேரணியில் இணைத்ததாகவும் அறியக்கிடைத்துள்ளது.

குறித்த பேரணி இன்று மதிய சுண்ணாகம் பகுதியை அடைந்ததும் அங்குள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் பரவலாக பலதரப்பட்ட போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கு ஆதரவாக பல நாடுகளில் தமிழர்கள் பேரணிகள், போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டம் என சூடுபிடித்துள்ள நிலையில் இலங்கை அரசின் சூழ்ச்சி திட்டமாக குறித்த “D2P” பேரணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.