Home தாயக செய்திகள் வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

9
0

வட மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை), பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 451 பேரின் மாதிரிகளில் 3 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று (வியாழக்கிழமை), பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 309 பேரின் மாதிரிகளில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர், யாழ்ப்பாணம்- ஹார்கில்ஸ் கட்டடத் தொகுதியிலுள்ள திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள். அந்த திரையரங்கில் பணியாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமையை அடுத்து திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடாத்தக்கது.