Home தாயக செய்திகள் ஐ.நா அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு:

ஐ.நா அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு:

14
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை, தவறான, ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக, சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரசாங்கம், நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதும், சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு முரணானதுமான அறிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், தெரிவித்துள்ளது.

மேலும், 60/251 தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது உள்ளிட்ட, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த, மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை, ஏற்கமுடியாது எனவும், முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.