Home உலக செய்திகள் உடல் தளர்ந்த போதும் உறுதியோடு தொடரும் அம்பிகையின் அகிம்சை போராட்டம்:

உடல் தளர்ந்த போதும் உறுதியோடு தொடரும் அம்பிகையின் அகிம்சை போராட்டம்:

610
0

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்தும், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் நான்கு அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து திருமதி. அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 7  ஆவது நாளை (05.03.2021) எட்டியுள்ளது. 

உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 7ம் நாளான இன்று (05/03) தனது கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார். 

தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும்,  அகிம்சை வழியில் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து நீதிக்காய் போராடும் அம்பிகையின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவம் பிரித்தானியா அரசின் மீது மக்கள் கடும் கோபமடைந்துள்ளதோடு பிரித்தானிய பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக பல நகர்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை 6 ஆம் நாளான நேற்று (Zoom) வழியாக தாயகத்திலிருந்த தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை லியோ, மௌலவி ரிஸ்வி மற்றும் பிரித்தானிய ஆன்மீக பணியகத்திலிருந்து அருட்தந்தை எல்மோ ஆகியோர் ஆசிச்செய்திகளை வழங்கியிருந்தனர்.

மேலும், லோகன் கணபதி (Member of Provincial Parliament (MPP) for Markham-Thornhill, Canada, தமிழகத்திலிருந்து தலைமை நீதியாளர் அரி பரந்தாமன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமார், பிரான்சிலிருந்து குருபரன், தமிழகத்திலிருந்து இயக்குநர் திரு. கௌதமன், கனடாவிலிருந்து நீண்ட கால தேசிய செயற்பாட்டாளரான திரு.கண்ணன் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதே போல் இன்று (05/03) பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன், தமிழகத்திலிருந்து ஆய்வாளர் அய்யநாதன் மற்றும் தாயகத்திலிருந்து அரசியல்வாதிகள் என பலர் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரை ஆற்றவுள்ளனர். 

அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.
மேற்படி மெய்நிகர் (Zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.
https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09
Website-
www.hungerfortruthandjustuce.blog
Facebook-
https://www.facebook.com/Hunger-Strike-for-Truth-and-Justice-105468548264839