Home செய்திகள் இரணைதீவில் பதற்றம் – குவிக்கப்படும் படைகள்:

இரணைதீவில் பதற்றம் – குவிக்கப்படும் படைகள்:

24
0

இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் உறுதியாகக் கூறி பெரும் எதிர்ப்பை வெளிக்காட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதோடு, தங்களை மீறி அடக்கம் செய்ய முற்பட்டால் அது பெரும் கலவரத்தில் முடியும் எனவும் அவர்கள் எச்சரிக்க்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சடலங்களைப் புதைக்க ஏதுவாக அங்கு கடற்படையினரால் தோண்டப்பட்டிருந்த குழிகளை மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர். இதனால் வழக்கத்துக்கு மாறாக அதிகளவு கடற்படையினரும், காவல்துறையினரும் நேற்று முழுவதும் இரணைதீவில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை நிலவி வருகிறது.