Home செய்திகள் வடக்கில் கடந்த இரு மாதங்களில் 841 பேருக்கு கொரோனா!

வடக்கில் கடந்த இரு மாதங்களில் 841 பேருக்கு கொரோனா!

28
0

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் இதுவரை வடமாகாணத்தில் 5 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது எனவும், அதில் மன்னார் மாவட்டத்தில் 3 இறப்புக்களும், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தலா ஒவ்வொரு இறப்புக்களும் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடப்பட்டார்.

இதேவேளை, வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 636 சுகாதாரப் பணியாளர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் தனியார்துறை மருத்துவப்பணியாளர்கள், மருத்துவபீட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.