Home செய்திகள் ஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்: எம்.ஏ. சுமந்திரன்

ஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்: எம்.ஏ. சுமந்திரன்

11
0

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம் – இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் எனவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே அடக்கம் செய்ய அரசு தயங்குவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ள எம்.ஏ. சுமந்திரன், ஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.