Home செய்திகள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரம்: மின்சக்தி அமைச்சர்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரம்: மின்சக்தி அமைச்சர்

21
0

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழ ங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கு இலவசமாக  இந்த மாதம்  6 ஆம் திகதி முதல் மின் சாரத்தை வழங்கச் சகல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளையும் அடையாளம் கண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டலஸ் தெரிவித்தார்.