Home செய்திகள் இரணைதீவில் பொங்கி எழுந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர்:

இரணைதீவில் பொங்கி எழுந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர்:

31
0

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (03/03) காலை 09:00 மணியளவில் இரணைமாதா நகர் இறங்குதுறையில் ஆரம்பமாகியுள்ளது.

இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.