Home செய்திகள் யாழில், 9 மாத குழந்தையை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது:

யாழில், 9 மாத குழந்தையை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது:

65
0

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தில் தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் கொடூர மாகத் தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் நிலையில் குழந்தையின் தாய் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 24 வயதான பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து குழந்தையுடன் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது பொலிஸார் குழந்தையைப் பொறுப்பேற்றுள்ளதோடு, குறித்த பெண்ணுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.