Home செய்திகள் இலங்கை,மேலும் 16 சிறைக் கைதிகளுக்கு கொரோனா!

இலங்கை,மேலும் 16 சிறைக் கைதிகளுக்கு கொரோனா!

53
0

இலங்கை சிறைகளில் மேலும் 16 சிறைக் கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர் எனவும், தொற்றுக்குள்ளான 16 பேரும் பெண் கைதிகள் எனவும் சிறைச் சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 747ஆக உயர்ந்துள்ளது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.