
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடை தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் அது குறித்த உண்மை நிலைமையை வெளியிடாமல் சுகாதார பிரிவினர் மூடிமறைக்க முற்படுவதாக கூறும் மக்கள் ஹம்பஹா வில் ஏற்பட்ட நிலமை ஏற்படுமோ என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடை தொழிற்சாலைகளிலுமாக 39 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஆடைத் தொழிற்சாலைகளுக்கு வடக்கின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுவதிகளும், இளைஞர்களும் சென்று வரும் நிலையில் வடக்கின் பல பகுதிகளுக்கும் கொரோனா பரவி அதிகளவானோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.