Home தாயக செய்திகள் யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர்:

யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர்:

10
0

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர், பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையில் மாநகர முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (18/2) வியாழக்கிழமை பிற்பகல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.