
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடனான தமது விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய Fly Dubai விமான சேவையின் முதலாவது விமானம் 58 பயணிகளுடன் டுபாயிலிருந்து இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 166 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.50 மணிக்கு மீண்டும் டுபாய் நோக்கி புறப்பட்டது.
இன்று முதல் வாரத்திற்கு இரு முறை (செவ்வாய் மற்றும் வியாழக்கிமமைகளில்) குறித்த விமான சேவை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.