Home செய்திகள் வட மாகாண வைத்தியசாலைகளுக்கு 50 மேலதிக வைத்தியர்கள் நியமனம்!

வட மாகாண வைத்தியசாலைகளுக்கு 50 மேலதிக வைத்தியர்கள் நியமனம்!

42
0

மத்திய சுகாதார அமைச்சினால் வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஐம்பது வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நேற்று (15/02) முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும், 9 பேர் கிளிநொச்சி மாவட்டத்திற்கும், 11 பேர் வவுனியா மாவட்டத்திற்கும், 9 பேர் மன்னார் மாவட்டத்திற்கும் 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று (15/02) தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நியமனத்தில் வடமாகாணத்தின் கஸ்ட பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கும் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், சிலாவத்துறை, வங்காலை வைத்தியசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, அலம்பில், சம்பத்நுவர ஆகிய வைத்தியசாலைகளுக்கும் வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.