Home செய்திகள் புளியம்பொக்கணை பகுதியில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு:

புளியம்பொக்கணை பகுதியில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு:

40
0

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திர புரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை முடித்துக்கொண்டு நேற்றிரவு குளிக்கச் சென்ற 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளிக்கச்சென்றவர் வீடு திரும்பாத நிலையில், அவரை தேடிச் சென்றபோது, அவரது உடை மற்றும் சவற்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் தேடல் பணிகளை தொடங்கியபோது, மேற்படி நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.