Home செய்திகள் இலங்கையில் கொரோனாவினால் மேலும் 7 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனாவினால் மேலும் 7 பேர் மரணம்!

15
0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, மேலும் 802 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.