Home செய்திகள் வர்த்தக நிலையங்களுக்கான பெர்மிற் விடையத்தில் விரைந்து செயற்பட்ட விக்கி!

வர்த்தக நிலையங்களுக்கான பெர்மிற் விடையத்தில் விரைந்து செயற்பட்ட விக்கி!

14
0

கிளிநொச்சியில் – 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கென பெர்மிற் அளிக்கப்பட்ட காணிகளுக்கு 33 வருட குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தற்போது குந்தகை ஒப்பந்தம் அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தெரியப்படுத்தப்பட்டபோதிலும் இது தொடர்பாக அவர் பெரிதாக அக்கறை காட்டாத நிலையில் காணி உரிமையாளர்கள் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி உள்ளனர்.

இதனை தொடர்ந்து உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கரைச்சிப் பிரதேச செயலர் மற்றும் வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோரிடம் தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, காணி உரிமையாளர்களின் கையொப்பங்களுடன் மேன்முறையீட்டு ஆவணம் ஒன்று வடமாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளதை அறிந்துகொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (14/02) ஞாயிறு காலை 9.30 மணிக்கு அவசரமான இந்த விடயம் தொடர்பாக தனது தவிசாளர் வேழமாலிதன் ஊடாக அவசர கூட்டமொன்றை ஒழுங்குபடுத்தியுள்ளார்.

தனிக்காட்டு ராஜா என்ற தோரணையில் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டாமல் திரிந்த சிறீதரனுக்கு, நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடானது, சிறீதரனையும் செயற்பாட்டு அரசியலை நோக்கித் தூண்டியுள்ளது.