Home செய்திகள் 70 ஆண்டுகளாக நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இன ஒற்றுமையை குலைத்தது ஆட்சியாளர்களே!

70 ஆண்டுகளாக நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இன ஒற்றுமையை குலைத்தது ஆட்சியாளர்களே!

81
0

சுதந்திரத்தின் பின்னர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இன ஒற்றுமையை குலைத்தது அன்று முதல் இன்று வரையில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

அத்தோடு நாட்டை உலக வல்லரசுகளுக்கு கடனாளியாக மாற்றியதற்கும், கடந்த கால மற்றும் நிகழ் கால ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பிரிவினர்களும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04/02) இடம்பெற்ற ஆராதனைகளின் பின்னர் அவர் தெரிவித்துள்ளார்.