
இலங்கையின் 73வது சுதந்திர நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் “கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு” பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும், தொடரும் அடக்குமுறை, நில அபகரிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் காவர்துறையினரிர் தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரிநாளை பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தபட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.