Home செய்திகள் “ஈழத் தமிழரின் இன எழுச்சிப் பேரணி” ஆரம்பம்!

“ஈழத் தமிழரின் இன எழுச்சிப் பேரணி” ஆரம்பம்!

153
0

வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் “பொத்துவில் முதல் பொலிகண்டி – ஈழத்தமிழர்களின் இன எழுச்சிப் பேரணி” இன்று (03/02) புதன்கிழமை ஆரம்பமாகி, கொட்டும் மழையிலும் போராட்டக்காரர்கள் தமது நடைபவணியை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை பொத்துவில் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இராணுவ வலயமாக பொத்துவில் நகர் மாற்றப்பட்டுள்ளது. பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, சோதனைச்சாவடியை கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் இடம் பெறுகிறன.

இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முஸ்லிம் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முஸ்லீம்களும் இணைந்துகொண்டுள்ளதுடன், சிறுவர், இளைஞர், பெரியோர், இந்துக்கள், கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மத தலைவர்கள் என அனைவருமாக இணைந்துகொண்டு, இப் பேரணி மதங்களை தாண்டி மொழியால் ஒன்றிணைந்து “ஈழத் தமிழ் இன எழுச்சிப் பேரணியாக” நடைபெற்று வருகிறது.