Home செய்திகள் யாழ் நலன்புரி நிலையங்களில் வாழும் 233 குடும்பங்களையும் மீள் குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம்:

யாழ் நலன்புரி நிலையங்களில் வாழும் 233 குடும்பங்களையும் மீள் குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம்:

55
0

உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியில்லாத மக்களை துரிதமாக மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்களது பிறப்பிடத்தை அண்மித்த பகுதியில் காணிகளை வழங்குமாறு இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போதைய பெறுமதிக்கு அமைய குறித்த பிரதேசத்தில் 7 இலட்சம் ரூபாய்க்கு 20 பேர்ச் காணியை கொள்வனவு செய்ய முடியாதென்பதனால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட அதே தொகைக்கு அரச விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு அமைய 10 தொடக்கம் 20 பேர்ச்சஸ் வரையிலான காணியை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.