Home செய்திகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப் புள்ளிகளைக் குறைக்க பரிசீலனை:

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப் புள்ளிகளைக் குறைக்க பரிசீலனை:

40
0

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகளைக் குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் எண் ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வெட்டுப் புள்ளிகள் குறித்துப் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களின் கோரிக்கை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.