Home செய்திகள் வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்:

வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்:

58
0

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் இன்று (1) காலை முதல் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதிகள் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து இன்று மதியத்துடன் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

செல்லத்துரை குணபாலச்செல்வம் என்பவருக்கு வடபிராந்திய பிரதான முகாமையாளராக நேற்று முன் தினம் நியமனம் வழங்கப்பட்டிருந்ததற்கு அமைய இன்றைய தினம் அவர் பதவியேற்க இருந்த நிலையில் குறித்த நியமனம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த நியமன ரத்தை கண்டித்தும், அவருக்கான நியமனத்தை உறுதி செய்யக்கோரியும் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.