Home செய்திகள் தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் போராட்டம்:

தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் போராட்டம்:

40
0

கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் போராட்டமொன்று இன்று (01/02) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் பந்தல் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் போராட்டமாக கைதானவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் A9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

இதேவேளை, கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்தினை சீர்செய்ய முற்பட்டனர். எனினும் போக்குவரத்தினை முழுமையாக சீர்செய்ய முடியாத நிலையில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து இடம்பெற்றது.