Home செய்திகள் வடக்கிற்கு காணி அதிகாரம் வழங்க அரசு இணக்கமாம்: டக்ளஸின் புதிய புராணம்:

வடக்கிற்கு காணி அதிகாரம் வழங்க அரசு இணக்கமாம்: டக்ளஸின் புதிய புராணம்:

34
0

வடக்கு மாகாணத்தின் காணி ஆணையாளருக்கும் உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதுதொடர்பான கடிதம் சில தினங்களில் சம்மந்தப்பட்ட ஆணையாளருக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(29.01 2021) இடம்பெற்ற கரைச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த செய்தியை தெரிவித்துள்ளார்.

அதாவது, நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கணிசமானவை வடக்கு மாகாண ஆணையாளருக்கு வழங்கப்பட்டாமல் இருந்து வந்தது.

குறிதத விடயம் வடக்கு மாகாண காணி ஆணையாளரினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த விவகாரத்தினை மத்திய அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, குறித்த அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.