Home செய்திகள் யாழில் பரவலாக திடீர் சோதனை நடவடைக்கையில் பொலிஸார்!

யாழில் பரவலாக திடீர் சோதனை நடவடைக்கையில் பொலிஸார்!

39
0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அதன் ஓர் அங்கமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலும் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இருப்பினும் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணி என்ன என்பது தொடர்பில் உண்மை நிலை மர்மமாகவே உள்ளது.