Home செய்திகள் காங்கேசன்துறை – தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

காங்கேசன்துறை – தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

50
0

காங்கேசன்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (30/01) இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் அத்துமீறி இன்று இந் நிகழ்வு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.