Home தாயக செய்திகள் இலங்கையில் மேலும் எண்மர் (8) கொரோனாவுக்கு பலி!

இலங்கையில் மேலும் எண்மர் (8) கொரோனாவுக்கு பலி!

54
0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் inRu (30/01) சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

இதே வேளை, நேற்றைய தினம் ((29/01) மட்டும் இலங்கையில் மேலும் 859 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 62,445 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.