
ஈழத்து எழுத்துலக வரலாற்றின் மூத்த எழுத்தாளர் ” டொமினிக் ஜீவா” அவர்கள் தனது 94வது வயதில் இன்று காலமானார்.
மல்லிகை சஞ்சிகை மூலம் தன்னை எழுத்துலகில் அறிமுகப்படுத்தி 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராக கடமையாற்றி தனக்கென ஓர் இடத்தை பிடித்த புகழ் பெற்ற எழுத்தாளர்.
வெறும் 30 சதத்திற்கு ஆரம்பத்தில் தனது மல்லிகை சஞ்சிகையை வீடு வீடாக திருந்து விற்று தனது எழுத்துலகை வலிமையாக்கிக்கொண்டு உலகப் புக பெற்ற ஓர் தமிழ் எழுத்தாளனாக இன்று எம்மை விட்டு பிரிந்துள்ளார்.
அன்னாரின் பிரிவு தமிழ் எதுத்தாளர் மத்தியில் ஈடு செய்யமுடியாததே. அவர் நேசித்த தமிழும், அவர் எழுதிய வரிகளும் உள்ளவரை அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.