
நெல்லியடி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த மற்றைய நபர் யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.