Home உலக செய்திகள் இந்திய கொரோனா தடுப்பூசி மருந்துகள் இலங்கை வந்தடைந்தது:

இந்திய கொரோனா தடுப்பூசி மருந்துகள் இலங்கை வந்தடைந்தது:

153
0

இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஏற்றி வந்த விசேட விமானம் இலங்கையை வந்தடைந்தது.

5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்திய அதிகாரிகளிடமிருந்து பொறுப்பேற்றார்.

இந்த மருந்துகள் இன்று பிற்பகல் நாட்டின் 6 பிரதான மருத்துவ மனைகளில் அமைக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு பெட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நாளை முதல் பல்வேறு பிரதேசங்களில் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினருக்காக விநியோகிக்கப்படவுள்ளன.