Home தாயக செய்திகள் யாழில் திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையம்!

யாழில் திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையம்!

22
0

122 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “நெடுந்தூர பேருந்து நிலையம்” பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் (27/01) திறந்து வைக்கப்பட்டது. 

குறித்த “நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா” யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.