
நாட்டில் நேற்று கொரோனா தொற்றுறுதியான 737 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் 21 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 102 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 96 பேருமாக மொத்தம் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் நேற்றைய தினம் 219 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் இதுவரை இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் 287 பேர் மரணமடைந்திருப்பதுடன், 59,167 பேர் கொரோனா நோயிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.