Home செய்திகள் விடுவிக்கப்பட்ட வவுனியா நகர் – பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாத வர்த்தகர்களின் கடைகளுக்கு பூட்டு!

விடுவிக்கப்பட்ட வவுனியா நகர் – பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாத வர்த்தகர்களின் கடைகளுக்கு பூட்டு!

24
0

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25/01) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையமும் மூடப்பட்டுள்ளது.

அத்தோடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாத பெருமளவு வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளதுடன் பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.