Home செய்திகள் யாழ்-பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவிக்கு கொரோனா!

யாழ்-பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவிக்கு கொரோனா!

39
0

நேற்றைய தினம் மட்டும் வடமாகாணத்தில் உறுதிசெய்யப்பட்ட 8 கொரோனா நோய்த் தொற்றாளர்களில் ஒருவர் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவி என தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி தென்னிலங்கை மாத்தளையை சேர்ந்தவர் எனவும் இவர் பல்கலைக்கழக படிப்பிற்காக யாழில் வசிப்பவர் எனவும் தெரிவந்துள்ளது.

மேற்படி மாணவி உட்பட பூனகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும், முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும், கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் இருவரும், கங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் என மொத்தம் எட்டு பேருக்கு வடமாகாணத்தில் கொரோனா தொற்று நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சங்கானை பகுதியில் நோய் தொற்றுக்கு உள்ளானவரும் கொழும்பிலிருந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் மட்டும் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 887 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார பிரிவின் Covid-19 தடுப்பிற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.