Home தாயக செய்திகள் இலங்கையில் மீள திறக்கப்பட்ட விமான நிலையம் – 50 பயணிகளுடன் வந்த முதல் விமானம்:

இலங்கையில் மீள திறக்கப்பட்ட விமான நிலையம் – 50 பயணிகளுடன் வந்த முதல் விமானம்:

87
0

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (21) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது.

ஓமானில் இருந்து குறித்த வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்த விமானத்தின் மூலம் சுமார் 50 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், அவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.