
கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு வந்த இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
33 வயதுடைய தாயுக்கும், 6 வயதுடைய மகனுக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் பஸ் மூலமே பருத்தித்துறை வந்திருந்தினர் என்றும், அதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரையும் சுயதனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.