
இலங்கையில் அதிகரித்துவ்அரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் விடுமுறை முடித்து ஜனவரி 11 முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதே வேளை, மாணவர்களை இரு பிரிவுகளாக பாடசாலைக்கு அழைத்து மாணவர்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கல்வி நடைமுறைகளை ஆரம்பிக்க உத்தேசித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதற்கமைய பாடசாலைகளுக்கான சுகாதரா உபகரணங்களை வழங்குவதற்கென 1050 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.