Home உலக செய்திகள் நேற்றைய தினம் (17/11) மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் மரணம்!

நேற்றைய தினம் (17/11) மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் மரணம்!

38
0

கொரோனா நோய் பரவலால் நாள் தோறூம் உலகெங்கும் மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில் நேற்றைய தினம் மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் குறித்த நோயினால் சாவடைந்துள்ளனர்.

இதே வேளை, 20,051 புதிய நோயாளர்கள் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 5ம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட இயல்பு நிலை முடக்கம் அமுலில் உள்ள போதும் நாளொன்றுக்கான இறப்பு எண்ணிக்கை சுமார் 600 ஐ அண்மித்திருப்பது பெரும் அச்ச சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் இயல்பு நிலை முடக்கத்தை நீக்க கோரி தலை நகர் லண்டனில் போட்டாங்களும் இடம்பெற்று வருகின்றன.

பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, நத்தார் பண்டிகை வியாபாரங்களை நடாத்தவும், அதற்கு மக்களை அனுமதித்தும் தமது ஆட்சிக்கு பங்கம் வராமல் அடுத்த தேர்தல் வாக்குகளை மையப்படுத்தி டிசம்பர் 2ம் திகதி வரை மட்டுமே இயல்பு நிலை முடக்கத்தினை தற்போதைய அரசு அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.