Home தாயக செய்திகள் இலங்கையில், நேற்றும் கொரோணா நோயாளர் ஐவர் சாவு!

இலங்கையில், நேற்றும் கொரோணா நோயாளர் ஐவர் சாவு!

20
0

இலங்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 5 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து குறித்த நோயினால் இலங்கையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில்….

இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும், கிருலப்பனையைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும், தொமட்டகொடையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆணொருவருமாக மூவர் அவர்களது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அது தவிர, கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும், கொழும்பு 02ஐச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.