Home தாயக செய்திகள் Covid-19, தொடர்பான அனைத்து தகவல்களுக்குமான புதிய செயலி இலங்கையில் அறிமுகம்:

Covid-19, தொடர்பான அனைத்து தகவல்களுக்குமான புதிய செயலி இலங்கையில் அறிமுகம்:

29
0

மருத்துவ துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டது. 

மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் வடிவமைக்கப்பட்ட குறித்த செயலி (APP) மூலம் கொவிட் நோய்த் தொற்றாளர்கள், தொடர்புடையவர்கள், தனிமைப்படுத்தல், பீசீஆர் பரிசோதனை சேவைகள், கண்காணிப்பு, தீர்மானங்களை மேற்கொள்தல், நோய்த்தொற்றாளர்களுக்கு கிட்டிய பிரதேசங்களுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும். 

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி தம்மிக ஜயலத் தலைமையிலான குழுவினால் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.