
யாழ் மாவட்டத்தின் கொரோனா நோய் பரவல் தடுப்பு தொடர்பான அவசர கூட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற குறித்த கூட்டத்தில், யாழ் மாவட்ட ரசாங்க அதிபர் மகேசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, வடமாகாண உள நல பணிப்பாளர் கேசவன், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ் மாஅட்ட பொலீஸ் உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட பிரதேச செயலர்கள், மேலும் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் சம்பந்தப்பட்டோர் உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை வித்தித்து இன்று முதல் நடைமுறைப்படுத்தும் வண்ணம் குறித்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய…..
- தநியார் கல்வி நிறுவனங்கள் இயங்க தடை
- திறந்த சந்தைகள் இயங்க தடை
- நடை பாதை வியாபாரங்களில் மரக்கறி வியாபாரம் தவிர்ந்த ஏனையவைக்கு தடை
- உணவகங்களில் இருந்து உண்ண தடை (Take away only)
- மத ஸ்தலங்களில் மக்கள் கூட தடை (மத குருமாருக்கு மட்டும் அனுமதி)
- அன்னதானத்துக்கு தடை
- மக்கள் கூட்டங்கள், பொது நிகழ்வுகளுக்கு தடை
- திருமண நிகழ்வுகளை வீட்டில் மட்டும் 50 பேருக்கு அதிகமில்லாமல் நடாத்த அனுமதி. (வெளிமாவட்டத்தோர் கலந்து கொள்ள தடை)
- மரணச் சடங்குகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி. (வெளிமாவட்டத்தோர் கலந்து கொள்ள தடை)
- பேரூந்துகளில் இருக்கைகளில் மட்டும் அனுமதி (முக கவசம் கட்டாயம்)
- முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே செல்லத் தடை. (அத்தியாவசிய தேவைக்காக குடும்பத்தில் ஒருவர் மட்டும் அனுமதி பெற்று வெளியில் வரலாம்)
- விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க பணிப்பு
போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று முதல் அவை அமுலில் இருக்கும் வண்ணம் அனைத்து தரப்பினருக்கும் பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர உதவி இலக்கமாக 0212225000 செயற்படும் எனவும், அவசர நிலை கருதி ஒருங்கிணைந்த நிலையமாக யாழ் மாவட்ட செயலகம் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.