Home செய்திகள் யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்றப்படும் 20 தாதியர்கள்!

யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்றப்படும் 20 தாதியர்கள்!

24
0

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 20 தாதியர்களை பொலன்நறுவையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா நோய் தொற்றின் மூன்றாம் அலை காரணமாக சிகிச்சை நிலையங்களில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் கூடுதல் தாதியர்களை கடமைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளை அனுபவம் உள்ள தாதியர்களை அதிக நோயாளர் உள்ள பகுதிகளுக்கு தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியவந்துள்ளது.

அந்த வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 4 தமிழ் தாதியர்கள் உட்பட 20 தாதியர்களை பொலன்நறுவை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.