
இலங்கையில் நேற்றைய தினமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 586 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை மினுவாங்கொட மற்றும் பேலியாகொட கொரோனா கொத்தனியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6500 ஐ கடந்துள்ளது.
நேற்றைய தினம் மட்டும் இலங்கையில் இனம் காணப்பட்ட கோரோனா நோயாளர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக;
- கொழும்பு மாவட்டம்: 209
- ஹம்பகா மாவட்டம்: 199
- யாழ்ப்பாணம் மாவட்டம்: 46
- பதுளை மாவட்டம்: 04
- நுவரேலியா மாவட்டம்: 02
- காலி மாவட்டம்: 02
- இரத்தினபுரி மாவட்டம்: 02
- மொனராகல மாவட்டம்: 01
- ஹேகால மாவட்டம்: 01
- ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 01
இவை தவிர நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்பு ஊழியர்களில் 115 மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 4 பேர் உள்ளடங்கலாக மொத்தம் 586 பேர் நேற்றைய தினம் கொரோனா நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.
5630 பேர் வரையிலானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9791 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.