Home செய்திகள் யாழில் 101 பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டது.

யாழில் 101 பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டது.

58
0

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27/10) இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.